அதிக முறை ஆட்டநாயகன் விருதுகள்- இயான் போத்தம் சாதனையை சமன்செய்த பென் ஸ்டோக்ஸ்!

Updated: Mon, Jul 28 2025 12:08 IST
Image Source: Google

Ben Stokes Record: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. 

இதில் இந்திய அணி வீரர்கள் கேப்டன் ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதமடித்தும், கேஎல் ராகுல் 90 ரன்களையும் சேர்த்தன் மூலம் கடைசி நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 425 ரன்களைச் சேர்த்தது. இப்போட்டியின் கடைசி நாள் இறுதிவரையிலும் முடிவு எட்டப்படாததன் காரணமாக இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இப்போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் 141 ரன்களையும், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகள் உள்பட 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீர்ர் இயன் போத்தம் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.

இதற்கு முன் இயான் போத்தம் 12 முறை ஆட்டநாயகன் விருதை வென்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் பென் ஸ்டோக்ஸும் 12ஆவது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்று, இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஜோ ரூட் 13 முறை ஆட்டநாயகன் விருதை வென்று முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

இங்கிலாந்துக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர்கள்

  • ஜோ ரூட் - 13
  • இயன் போத்தம் - 12
  • பென் ஸ்டோக்ஸ் - 12
  • கெவின் பீட்டர்சன் - 10
  • ஸ்டூவர்ட் பிராட் - 10
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை