விராட் கோலி ரன்களை சேர்க்கும் வழியை நிச்சயம் கண்டுபிடிப்பார் - ரோஹித் சர்மா!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. அதேசமயம் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ளது.
தையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதில் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இத்தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சோபிக்க தவறி வருகின்றனர்.
அதிலும் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இத்தொடரின் முதல் போட்டியில் சதமடித்ததை தவிர்த்து மற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து வெறும் 26 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு அவர் இத்தொடரில் ஒவ்வொரு முறையும் அவுட் சைட் ஆஃப் பந்தில் தனது விக்கெட்டை இழப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் மெல்போர்னில் நடைபெறவுள்ள பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இத்தொடரின் எஞ்சிய ஆட்டத்தில் விராட் கோலி வலுவாக திரும்பி வருவார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆதரவளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சமகால கிரிக்கெட்டில் விராட் கோலி மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். அவர் ரன்களை சேர்க்கும் வழியை நிச்சயம் கண்டுபிடிப்பார். மேலும் யார் எங்கே பேட் செய்வார்கள் என்பது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பேட்டிங் பயிற்சியின் போது இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது இடது முழங்கால் பகுதியில் காயத்தை சந்தித்தார். இந்நிலையில் தனது காயம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கேப்டன் ரோஹித் சர்மா, தன் தற்போது நாலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கே), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, தனூஷ் கோட்டியான்.