IND vs AUS: நான்காவது டெஸ்டிலிருந்தும் விலகினார் பாட் கம்மின்ஸ்!

Updated: Mon, Mar 06 2023 15:18 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3ஆவது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. இதற்கிடையில், தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினார் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ். இதனால் 3-வது டெஸ்டில் அவர் விளையாடவில்லை. ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்று அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வர முடியாத சூழலால் 4ஆவது டெஸ்டையும் தவறவிடுகிறார் கம்மின்ஸ். இதனால் 4ஆவது டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. எனினும் முழு நேர கேப்டன் பொறுப்பில் தனக்கு விருப்பமில்லை எனக் ஸ்மித் கூறியுள்ளார். 

இந்தூர் டெஸ்டுக்குப் பிறகு பேசிய ஸ்மித், என்னுடைய காலம் முடிந்துவிட்டது. இது பேட் கம்மின்ஸின் அணி என்றார். கம்மின்ஸ் கேப்டனான பிறகு ஆஸி. அணிக்கு 4ஆவது முறையாகப் பொறுப்பேற்கவுள்ளார் ஸ்மித்.  டெஸ்ட் தொடருக்கு அடுத்ததாகத் தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

பணிச்சுமை காரணமாக ஐபிஎல் போட்டியிலும் கம்மின்ஸ் பங்கேற்கவில்லை. ஜூன் மாதத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்று, ஆஷஸ் தொடர் போன்ற முக்கியமான போட்டிகளில் கம்மிங்ஸ் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை