அமெரிக்காவில் இந்த வருடம் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 5வது லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 80 ரன்களைச் சேர்த்தார். டெக்ஸாஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெரால்டு கோட்ஸி 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 

Advertisement

தொடக்க வீரர்கள், டேவான் கான்வே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க மறுபுறம் தடுமாறிய கேப்டன் டு பிளேஸிஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அதை விட அடுத்ததாக வந்த டேவிட் மில்லர் 14, மிலிந்த் குமார் 3, லஹிரு மிலாந்தா 15,  மிட்சேல் என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் வாஷிங்டன் அணியின் சிறப்பான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

இதனால் 50/5 என ஆரம்பத்திலேயே டெக்ஸாஸ் சரிவை சரிந்த போது களமிறங்கிய டுவைன் பிராவோ அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். இருப்பினும் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த மிட்சேல் சாட்னர் 22 ரன்கள் அடித்து ஆட்டமிழந்ததால் பின்னடைவை சந்தித்த பிராவோ மனம் தளராமல் தொடர்ந்து அரை சதமடித்து வெற்றிக்கு போராடினார்.

 

குறிப்பாக ஆன்ரிச் நோர்ட்ஜே வீசிய 18ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் அவர் 106 மீட்டர் மெகா சிக்சரை பறக்க விட்டு ரசிகர்கள் மற்றும் வர்னணையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். ஆனாலும் எதிர்ப்புறம் கை கொடுப்பதற்கு பேட்ஸ்மேன் இல்லாததால் ரன் ரேட் எகிறிய நிலையில், அன்றிச் நோர்ட்ஜெ வீசிய கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை என்ற அசாத்தியமான சூழ்நிலை டெக்சாஸ் அணிக்கு ஏற்பட்டது.

Advertisement

இருப்பினும் அதிலும் போராடிய பிராவோ அந்த ஓவரில் 2, 6, 2, 0, 4, 6 என 20 ரன்கள் எடுத்ததுடன், 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 76 ரன்களை விளாசி வெறித்தனமாக போராடியும் வெற்றி காண முடியவில்லை. இதனால் டெக்ஸாஸ் அணியால் 20 ஓவர்களில் 157 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி திர்ல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் மற்றும் அகில் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றிக்கு 80 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய மேத்தியூ ஷார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் டுவைன் பிராவோ விளாசிய 106 மீட்டர் இமாலய சிக்சர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News