பிரெண்டன் டெய்லர் சதம்: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்பிரிக்க பிராந்திய அணிகளுக்கு இடையேயான தகுதிப் போட்டியில் ஜிம்பாப்வே அணியின் அனுபவ வீரர் சதம் அடித்து அசத்தியுள்ளார். 

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இருந்து பங்கேற்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் போட்ஸ்வானா அணிகள் மோதின. ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற் போட்ஸ்வானா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் மருமணி 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பிரையன் பென்னட்டுடன் இணைந்த அனுபவ வீரர் பிராண்டன் டெய்லர் அபாரமாக விளையாடியதுடன், மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் பந்துகளை பறக்கவிட்டார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் டெய்லர் 46 பந்துகளில் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்காக டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரஸா மட்டுமே டி20 கிரிக்கெட்டில் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில்  பிரெண்டன் டெய்லர் 54 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 123 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.

அதேசமயம் பிரையன் பென்னட்டும் 65 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய போட்ஸ்வானா அணியில் தரிந்து பெரேரா 31 ரன்களையும், கசெல்மேன் 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதனால் போட்ஸ்வானா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 89 ரன்களை மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்ட் நங்ராவா மற்றும் ரியான் பார்ல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் போட்ஸ்வானா அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த போட்டியில் சதம் விளாசிய பிராண்டன் டெய்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News