டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியை தேர்வு செய்த பிரையன் லாரா!

Updated: Mon, Apr 29 2024 20:38 IST
டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியை தேர்வு செய்த பிரையன் லாரா! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை இம்மாத இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்தவகையில் நடப்பு  டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியும் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற வீரர்களுக்கான இடம் உறுதியாகியுள்ள நிலையில், மீதமிருக்கும் இடங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்பதனை முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கணித்துள்ளார். அவர் கணித்துள்ள அணியில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்றாம் இடத்திற்கு விராட் கோலியையும், நான்காம் இடத்தில் சூர்யகுமார் யாதவையும் தேர்வு செய்துள்ள அவர், விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.

 

மேலும் அணியின் ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். மேற்கொண்டு சுழற்பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரைத் தேர்வு செய்துள்ள அவர், வேகப்பந்து வீச்சாளர்களில் ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சந்தீப் சர்மா மற்றும் மயங்க் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

பிரையன் லாரா தேர்வு செய்த இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சந்தீப் சர்மா, மயங்க் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை