டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் - ரோஹித் தொடக்கம் தர வேண்டும் - பிரையன் லாரா!

Updated: Tue, Apr 09 2024 16:39 IST
டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் - ரோஹித் தொடக்கம் தர வேண்டும் - பிரையன் லாரா! (Image Source: Google)

இந்தாண்டு ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன. 

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் மே ஒன்றாம் தேதி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணி வீவரத்தை ஐசிசியிடம் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் சமர்பிக்க வேண்டும். அதேசமயம் அணியில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பும் அணிகளுக்கு மே 25ஆம் தேதி வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரைப் பொறுத்த இந்திய அணியின் வீரர்கள் தேர்வு இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டிவருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி தேர்வாளர்கள் பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். இதில் அவர்களின் சிறப்பான ஆட்டம் மற்றும் உடற்தகுதி போன்றவற்றை தேர்வாளர்கள் கருத்தில் கொண்டு அணியை தேர்வு செய்யவுள்ளனர் என தகவல்கள் வந்துள்ளனர். 

இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா களமிறங்க வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஒரு தொடக்க பேட்ஸ்மேனாக, கோலி பெரும்பாலும் 130 ஸ்டிரைக் ரேட்டுடன் தொடங்குகிறார், ஆனால் இன்னிங்ஸ் முடிவில் 160 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அவரால் எட்ட முடியும், இது ஏற்றுக்கொள்ளத்தக்கது.

எனது கருத்துப்படி, பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டைப் பொருட்படுத்தாமல், உலகக் கோப்பைக்கான இந்தியாவின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் தான். டி20 உலகக் கோப்பையில் ரோஹித்தும் விராட்டும் தொடக்கம் கொடுத்தால் அது இந்தியா அணிக்கு பெரும் பலனை வழங்கும் என்று நினைக்கிறேன். இருப்பினும், தொடக்க இடத்தில் கூடுதலாக ஒரு இளம் வீரர் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ." என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை