ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இதையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

Advertisement

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க இருந்த இப்போட்டியானது மழை காரணமாக தமதமாகியுள்ளது. தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் இப்போட்டியானது கைவிடப்படுவதுடன், இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும். இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் எதிர்வரும் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஜோஸ் பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் தொடரில் லங்கஷைர் அணிக்காக பட்லர் விளையாடி வந்த நிலையில், காயம் காரணமாக அவர் அத்தொடரில் இருந்து விலகினார்.  தற்சமயம் காயத்தில் இருந்து ஜோஸ் பட்லர் முழுமையாக குணமடையாத காரணத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன் காரணமாக இங்கிலாந்து டி20 அணியின் கேப்டனாக பில் சால்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரன ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் லியாம் லிவிங்ஸ்டோன் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் லிவிங்ஸ்டோன் நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News