ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜஸ்பிரித் பும்ரா; ஜெய்ஸ்வால், கோலி முன்னேற்றம்!

Updated: Wed, Oct 02 2024 19:50 IST
Image Source: Google

வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்றுவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரின் முடிவில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது. 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அந்தவகையில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேசமயம் வங்கதேச டெஸ்ட் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். அதன்பின் 4 மற்றும் 5 ஆம் இடங்களில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் உள்ளனர். 

மேற்கொண்டு வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 6 இடங்கள் முன்னேறியதுடன், பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலிலும் 6ஆம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அதேசமயம் ரிஷப் பந்த் 3 இடங்கள் பின் தங்கி 9ஆம் இடத்தையும், ரோஹித் சர்மா 5 இடங்கள் பின் தங்கி 15ஆவது இடத்திற்கும், ஷுப்மன் கில் இரண்டு இடங்கள் பின் தங்கி 16ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். அதேசமயம் இலங்கை அணியைச் சேர்ந்த கமிந்து மெண்டிஸ் 11ஆம் இடத்திற்கும், தினேஷ் சண்டிமால் 20ஆம் இடத்திற்கும், ஏஞ்சலோ மேத்யூஸ் 23ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளனர். 

 

அதேசமயம் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். வங்கதேச டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தன் காரணமாக அவர் இந்த இடத்தை அடைந்துள்ளார். அதேசமயம் கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், வங்கதேச டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற நிலையிலும் ஒரு இடம் பின் தங்கி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு இந்த பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 6ஆம் இடத்தில் தொடரும் நிலையில், மற்ற எந்தவொரு இந்திய வீரரும் டாப் 10 இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இத்தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச அணி வீரர்கள் மெஹிதி ஹசன் 4 இடங்கள் முன்னேறி 18ஆம் இடத்தையும், ஷாகிப் அல் ஹசன் 5 இடங்கள் முன்னேறி 28ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதுதவிர ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் முதலிரண்டு இடங்களில் நீடித்து வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை