தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் நியமனம்!

Updated: Sat, Jan 07 2023 18:42 IST
Image Source: Google

கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என இரண்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டது பிசிசிஐ. 

இதனால் தேர்வுக்குழுத் தலைவராக உள்ள சேதன் சர்மா மற்றும் அவருடைய குழுவினரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததாக அறியப்பட்டது. எனினும் இலங்கைக்கு எதிரான டி20 தொடர் வரை சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவே இந்திய அணியைத் தேர்வு செய்தது.

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் தேர்வாகியுள்ளார். இதற்காக உருவாக்கப்பட்ட தேர்வுக்குழு, சேத்தன் சர்மாவையே மீண்டும் நியமித்துள்ளது. 

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்வுக்குழுவில் பணியாற்ற 600 பேர் விண்ணப்பித்ததில் 11 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களிலிருந்து தேர்வானவர்கள்: 1. சேதன் சர்மா, 2. ஷிவ் சுந்தர் தாஸ், 3. சுப்ரோடோ பானர்ஜி, சலில் அன்கோலா, ஸ்ரீதரன் ஷரத். இவர்களில் சேதன் சர்மாவைத் தேர்வுக்குழுத் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்குழுவில் உள்ள ஸ்ரீதரன் ஷரத், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு அணிக்காக 139 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை