12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

டிரினிடாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய லூசிய கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ்  இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இப்போட்டியில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசியதுடன், தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்தனர். மேற்கொண்டு முதல் விக்கெட்டிற்கு 145 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினார். 

Advertisement

அதன்பின் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஜான்சன் சார்லஸ் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 89 ரன்களைக் குவித்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸும் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களில் டிம் செய்ஃபெர்ட் 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களைக் குவித்தது. 

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் கீரன் பொல்லர்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய கேசி கார்டி, நிக்கோலஸ் பூரன், டிம் டேவிட், அகீல் ஹொசைன், கேப்டன் கீரன் பொல்லார்ட் மற்றும் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸல் என அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இதற்கிடையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வ்வாய்ப்பை தவறவிட்டார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் கிறிஸ் ஜோர்டன் 27 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்க்ள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நைட் ரைடர்ஸ் அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கிங்ஸ் அணி தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News