வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அன்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லூசியா கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணிக்கு ஜஸ்டின் க்ரீவ்ஸ் - ஃபகர் ஸமான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். 

Advertisement

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 35 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஃபகர் ஸமான் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கோஃபி ஜேம்ஸ் 5 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்டின் க்ரீவ்ஸும் 36 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜுவெல் ஆண்ட்ரூ 15, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இமாத் வசிம் 29, சாம் பில்லிங்ஸ் 14 ரன்களைச் சேர்த்ததை தவித்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். 

Advertisement

இதனால் ஃபால்கன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. செயின்ட் லூசியா கிங்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தொடங்கியது. 

அதன்பின் 28 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பனுகா ராஜபக்ஷாவும் 9 ரன்களுடன் நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய அக்கீம் 2 சிக்ஸர்களுடன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 26 ரன்களையும், மறுபக்கம் தொடக்க வீரராக களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிவ்ரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். 

இதன்மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 17 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு சிபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதேசமயம் ஃபால்கன்ஸ் அணியானது நடப்பு சீசனில் விளையாடிய 4 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்துள்ளது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News