உலகக் கோப்பைக்கான சிறந்த அணியை தேர்வு செய்த ஆஸ்திரேலிய வாரியம்; விரட கோலிக்கு கேப்டன் பதவி!

Updated: Mon, Nov 13 2023 21:54 IST
உலகக் கோப்பைக்கான சிறந்த அணியை தேர்வு செய்த ஆஸ்திரேலிய வாரியம்; விரட கோலிக்கு கேப்டன் பதவி! (Image Source: Google)

கடந்த மாதம் தொடங்கிய ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பரபரப்பான, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கொண்டு நடப்பு உலகக் கோப்பைக்கான சிறந்த அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து அறிவித்துள்ளது. 

அதில் விராட் கோலி உள்ளிட்ட 4 இந்திய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ள 11 பேர் கொண்ட சிறந்த அணியில், “குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர், தென் ஆபிப்ரிக்கா), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), விராட் கோலி (இந்தியா, கேப்டன்), ஐடன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா), கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), மார்கோ ஜான்சென் (தென் ஆப்ரிக்கா), ரவீந்திரா ஜடேஜா (இந்தியா), முகமது ஷமி (இந்தியா), ஆடம் ஸாம்பா (ஆஸ்திரேலியா), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா)” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 12வது வீரராக இலங்கையின் தில்ஷன் மதுஷங்கா அறிவிக்கப்பட்டுள்ளார்

11 பேர் கொண்ட இந்த பட்டியலில் 4 இந்திய வீரர்கள், தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தலா 3 வீரர்களுடன், நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளார். குறிப்பாக இந்திய வீரர் கோலி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தோல்வியே இன்றி அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்று இருந்தாலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தேர்வு செய்த அணிக்கு கோலி தான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித்திற்கு அணியில் வாய்ப்பு உல்லை.

தேர்வான வீரர்களின் புள்ளி விவரங்கள்:

  •     குயிண்டன் டி காக் - 9 இன்னிங்ஸ் - 591 ரன்கள்
  •     டேவிட் வார்னர் - 9 இன்னிங்ஸ் - 499 ரன்கள்
  •     ரச்சின் ரவீந்திரா - 9 இன்னிங்ஸ் - 565 ரன்கள்
  •     விராட் கோலி - 9 இன்னிங்ஸ் - 594 ரன்கள்
  •     ஐடன் மார்க்ரம் - 9 இன்னிங்ஸ் - 396 ரன்கள்
  •     கிளென் மேக்ஸ்வெல் - அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் - 201* ரன்கள்
  •     மார்கோ ஜான்சென் - 17 விக்கெட்டுகள்
  •     ரவீந்திர ஜடேஜா - 16 விக்கெட்டுகள்
  •     முகமது ஷமி - 16 விக்கெட்டுகள்
  •     ஆடம் ஸாம்பா - 22 விக்கெட்டுகள்
  •     ஜஸ்பிரித் பும்ரா - 17 விக்கெட்டுகள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை