இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று 41வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisement

தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விராட் கோலி, “தோனியை போன்ற ஒரு தலைவன் வேறு யாரும் இல்லை. இந்திய கிரிக்கெட்டிற்கு தோனி செய்ததற்கு மனமார்ந்த நன்றிகள். தோனி என்னுடைய மூத்த சகோதரராகஅவ மாறிவிட்டார். அன்பும், மரியாதையும் எப்போதும் உண்டு” என்று கூறியுள்ளார்.

Advertisement

கிரிக்கெட் விளையாடும் போது தோனிக்கும், சேவாக்கிற்கும் மோதல் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதனை சுக்கு நூறாக உடைத்தது போல் டிவிட் போட்டுள்ள சேவாக், “ஒரு முற்றுப் புள்ளி இல்லாமல் வாக்கியம் முடிவு பெறாது. அதே போல் தான் தோனியும், ஆட்டமிழக்காத வரை போட்டியும் முடியாது என்று சேவாக் கூறியுள்ளார். தோனி போன்ற ஒரு நபர் கிடைக்க மற்ற அணிகளுக்கு கொடுத்து வைக்கவில்லை” என்றும் சேவாக் பாராட்டினார்.

இதே போன்று, தோனிக்கும், ரெய்னாவுக்கும் விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது சின்ன தல ரெய்னா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தோனியை தனது பெரிய அண்ணன் என்று குறிப்பிட்டுள்ளார். என் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் ஆதரவாளராகவும், ஆசிரியராகவும் இருந்துள்ளார். உங்களுக்கு இறைவன் நல்ல உடல் நலத்தை தர வேண்டுகிறேன்” என்று  குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது வாழ்த்துச் செய்தியில், “கங்குலி போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்று கற்று கொடுத்தார். ஆனால் தோனி அதனை பழக்க வழக்கமாகவே மாற்றிவிட்டார். இந்திய கிரிக்கெட்டை வடிவமைத்த இரண்டு ஜாம்பவான்களும் ஒரு நாள் இடைவெளியில் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். 

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், “தோனியின் ஈடு இணையற்ற சாதனைகள் எளிய கிராமப்புற இளைஞர்களின் கனவை அடைய நம்பிக்கை தரும். மீண்டும் சென்னை அணிக்காக நீங்கள் விளையாடுவதை எதிர்நோக்கி காத்துள்ளேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News