Chennai Super Kings vs Mumbai Indians Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்கிவுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் முதல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

Advertisement

இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இரண்டு அணிகளான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டியானது நாளை சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் விளையாடவுள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

CSK vs MI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் -  எம் ஏ சிதம்பரம் மைதனாம், சேப்பக்
  • நேரம் - மார்ச் 23, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

CSK vs MI Pitch Report

ஐபிஎல் 2025 இன் மூன்றாவது போட்டி சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி சேஸிங் செய்வதற்கே விரும்புகிறது. இங்கு கடைசியாக நடந்த 5 டி20 போட்டிகளில், 4 போட்டிகளில் ரன்களைத் துரத்திச் சென்ற அணிகள் வெற்றி பெற்றுள்ளன. அதேசமயம் சர்வதேச டி20 போட்டியில், இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 151 ரன்களாகவுள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில், இங்கு 9 போட்டிகள் நடைபெற்றன, அதில் 6 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளதன் காரணமாக, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது சாதகமாக அமையலாம்.

CSK vs MI: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

CSK vs MI Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 37
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – 17
  • மும்பை இந்தியன்ஸ் – 20

CSK vs MI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரியான் ரிக்கல்டன்
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ரச்சின் ரவீந்திர, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர்
  • பந்து வீச்சாளர்கள் - நூர் அகமது, மதிஷா பதிரானா.
Advertisement

Chennai Super Kings vs Mumbai Indians Probable Playing XI

Chennai Super Kings Probable Playing XI : ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திர, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், மதிஷா பதிரனா, நூர் அகமது, கலீல் அகமது.

இம்பேக்ட் பிளேயர் - தீபக் ஹூடா (பேட்டர்) / அன்ஷுல் காம்போஜ் (பந்து வீச்சாளர்)

Advertisement

Mumbai Indians Probable Playing XI: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), நமன் தீர், ராபின் மின்ஸ் , மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், கர்ண் சர்மா, டிரென்ட் போல்ட், முஜீப் உர் ரஹ்மான்.

இம்பேக்ட் பிளேயர் - அர்ஜுன் டெண்டுல்கர்.

CSK vs MI Dream11 Prediction, CSK vs MI, CSK vs MI Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, CSK vs MI Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Chennai Super Kings vs Mumbai Indians

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News