ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் கனடா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் - ஸ்மித் படேல் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் இணைது முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஸ்டீவன் டெய்லர் 27 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

அதன்பின் ஸ்மித் படேலுடன் இணைந்த கேப்டன் மொனாங்க் படேலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 63 ரன்களைச் சேர்த்த நிலையில் ஸ்மித் படேல் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ் 15 ரன்களிலும், மிலிந்த் குமார் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனையடுத்து மொனாங்க் படேலுடன் இணைந்த ஷயான் ஜஹாங்கீரும் அதிரடியாக விளையாடினார். 

Advertisement

இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொனாங்க் படேல் சதமடித்து அசத்த, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷயான் ஜஹாங்கீரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் அமெரிக்க அணி இன்னிங்ஸ் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களைக் குவித்துள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொனாங்க் படேல் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 121 ரன்களையும், ஷயான் ஜஹாங்கீர் 6 பவுண்டரிகளுடன் 57 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். 

இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் - ஆதித்யா வரதராஜன் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதைல் ஆதித்யா 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஆரோன் ஜான்சனுடன் இணைந்த பிரகாத் சிங் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் ஜான்சன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆரோன் ஜான்சன் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அவரைத்தொடர்து களமிறங்கிய தில்ப்ரீத் பஜ்வா, கேப்டன் நிக்கோலஸ் கிர்டன் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரகாத் சிங் 42 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய ஹர்ஷ் தாகர் ஒருபக்கம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் மொவ்வா ஒரு ரன்னிலும், சாத் பின் 7 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ஹர்ஷ் தாகர் மற்றும் தில்லன் ஹெய்லிகர் இணை அபாரமாக விளையாடி அணியின் வெற்றிக்காக போராடினர். 

இருவரும் இணைந்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து 8ஆவது விக்கெட்டிற்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தில்லன் ஹெய்லிகர் தனது விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய ஹர்ஷ் தாக்கூர் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 77 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்ததால் கனடா அணியின் தோல்வியும் உறுதியானது.

Advertisement

இதனால் கனடா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்களை மட்டுமே சேர்த்தது. அமெரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நோஸ்துஷ் கென்ஜிகே 3 விக்கெட்டுகளையும், ஜஸ்தீப் சிங் மற்றும் ஷால்க்விக் ஷாட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் அமெரிக்க அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News