வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி. இவரது தலைமையின் கிழான வெஸ்ட் இண்டீஸ் அணி 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் டி20 உலகக்கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 

Advertisement

தற்போது 37 வயதாயகும் டேரன் சமி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 38 டெஸ்டுகள், 126 ஒருநாள், 68 டி20  போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் அல்லாத இயக்குநராக டேரன் சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரைப் போல மேலும் இருவர் இயக்குநர்களாகத் தேர்வாகியுள்ளார். 

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ரிக்கி கூறுகையில், “வாரியத்தின் முடிவுகளில் டேரன் சமியின் யோசனைகள் மிகவும் உதவியாக இருக்கும். சரியான கேள்விகளை சமி எழுப்ப வேண்டும். எங்களுக்கு நல்ல யோசனைகளையும் தீர்வுகளையும் அவர் சொல்லவேண்டும்” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News