இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று வதோதராவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி 9 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

Advertisement

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷமைன் காம்பெல் - சின்னலே ஹென்றி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சாரிவிலிருந்து மீட்டெடுத்தன்ர்.  இதில் ஷமைன் காம்பெல் 46 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து அரைசதம் கடந்த சின்னலே ஹென்றியும் 61 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

இதனால் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தீப்தி சர்மா 6 விக்கெட்டுகளையும், ரேணுகா சிங் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர் 32 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்களியும், தீப்தி சர்மா 39 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

இதனால் 28.2 ஓவரில் 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.  இதில் தீப்தி சர்மா ஆட்டநாயகி விருதையும், ரேணுகா தாக்கூர் தொடர் நாயகி விருதையும் வென்றனர். இந்நிலையில் இப்போட்டியில் தீப்தி சர்மா 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். 

அந்தவகையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தீப்தி சர்மாவின் 3ஆவது 5 விக்கெட் ஹால் இதுவாகும். இதன்மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை எனும் சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் எக்தா பிஸ்ட், நீதூ டேவிட் மற்றும் ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் தலா 2 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதுதவிர்த்து சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீராங்கனைகள் பட்டியலில் தீப்தி சர்ம நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் அனீஷ் முகமது 6 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்காவின் சுனே லூஸ் மற்றும் இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் ஆகியோர் உள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News