டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவி குறித்து ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்!

Updated: Fri, Aug 09 2024 21:04 IST
Image Source: Google

ரசிகர்களில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானது ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை 17 சீசன்களை வெற்றியுடன் கடந்துள்ள இத்தொடரானது அடுத்த ஐபிஎல்சீசனுக்காக தயாராகி வருகிறது. அந்தவகையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இத்தொடருக்கான வீரர்கள் மெகா எலாம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனையடுத்து அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகமும் தங்கள் அணியில் பல்வேறு மாற்றங்களை செய்துவருகிறது. அதில் முதல் படியாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரிக்கி பாண்டிங்கை அணியில் இருந்து நீக்கியுள்ளது.

ரிக்கி பாண்டிங்கின் பயிற்சிக்கு கீழ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 2020ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியும், 2021ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதைத் தவிர்த்து மற்ற சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் லீக் சுற்றுடனே வெளியேறது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு சீசன்களிலும் மோசமான ஆட்டத்தின் காரணமாக அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்ததும் அவரது நீக்கத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கபடுகிறது. 

இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்தியர் ஒருவரை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க விரும்புவதாக அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் இந்திய வீரர் ஒருவரை தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க விரும்புகிறது. மேலும் தங்களுக்கு அதிக நேரத்தை ஒதுக்கக்கூடிய ஒருவருடன் வேறு திசையில் செல்ல விரும்புகிறது.  

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதன்படி, ஐபிஎல் தொடர் நடைபெறும்போது மட்டுமல்லாது, மற்ற நேரங்களிலும் வீரர்களுடன் நேரத்தினை செலவிடக் கூடிய ஒருவரை அவர்கள் பயிற்சியாளராக தேடுகின்றனர். ஐபிஎல் தொடரைத் தவிர்த்து, எனக்கு மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. என்னால் அணி வீரர்களுடன் ஆண்டு முழுவதும் நேரத்தை செலவிட முடியாது. இருப்பினும் நான் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக செயல்பட ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை