இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் இலங்கை அணியானது கடந்த 1997ஆண்டுக்கு (27 ஆண்டுகளுக்கு)பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

Advertisement

அதன்படி இப்போடியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 98 ரன்களையும், குசால் மெண்டிஸ் 59 ரன்களையும் குவித்தததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி பேட்டர்கள் சோபிக்க தவறினர். 

Advertisement

இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டியதால் 138 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆட்டநாயகன் விருதையும், துனித் வெல்லாலகே தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்தீப்பில் பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தங்கள் தோல்விக்கான காரணத்தை விளக்கியுள்ளார். அப்போது பேசிய அவர், “இந்த தொடரில் இலங்கை அணி பேட்டர்களில் ஸ்வீப் ஷாட்டை விளையாடுவதில் சீராக இருந்தனர். அவர்கள்  கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தினர். மைதானத்தில் அதிக ரன்கள் எடுக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் ஸ்வீப் ஷாட்டை பயன்படுத்தி மிட்விக்கெட் மற்றும் ஸ்கெயர் லெக் திசையில் ரன்களை சேர்த்தனர்.

இதனை ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் செய்யத் தவறிய ஒன்று. நாங்கள் போதுமான ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் அல்லது பேடல் ஸ்வீப் ஷாட்டுகளை விளையாடமல், இறங்கிவந்து விளையாடுவதில் அதிக கவனத்தை செலுத்துவிட்டோம். அதுதான் எங்களுக்கும், இலங்கை பேட்டர்களுக்காமன் வித்தியாசமாக இருந்தது. அதிலும் குறிப்பாக இப்போட்டியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் விக்கெட்டுக்கு வெளியே நிறைய ரன்களை எடுத்தனர்.

அவர்கள் பந்தின் திருப்பத்தைப் பயன்படுத்தி, ஸ்வீப் ஷாட்டுகளை விளையாடியதோது, பீல்டரை இடது மற்றும் வலது பக்கமாக நகர்த்தினார்கள். அவர்கள் எப்படி பேட்டிங் செய்தார்கள் என்பதில் புத்திசாலிதன்மாக இருந்தனர் ஆனால் நாங்கள் அதனை செய்ய தவறவிட்டோம். மொத்தத்தில், நாம் எங்கு தவறு செய்தோம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும், அதன்படி நாங்கள் இத்தொடரில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நாங்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை.

Advertisement

பந்து திரும்பும் மற்றும் அடிப்பது கடினமாக இருக்கும் அத்தகைய ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து விளையாடுவது முக்கியம். கொஞ்சம் தைரியமாக இருப்பது முக்கியம். இந்தத் தொடர் முழுவதும் அவர்களைக் கொஞ்சம் அழுத்தத்திற்கு உட்படுத்தும் அளவுக்கு நாங்கள் தைரியமாக இருந்ததாக நான் நினைக்கவில்லை. அதனால்தான் சற்று பின்தங்கியிருந்தோம்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News