EN-U19 vs IN-U19, 4th ODI: இங்கிலாந்து அண்டர்19 அணிக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் சதமடித்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கும் உதவினர்.

Advertisement

இந்திய அண்டர்19 அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது வொர்செஸ்டரில் நேற்று நடைபெற்ற நிலையில், இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஆயூஷ் மாத்ரே 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் இணைந்த வைபவ் சூர்யவன்ஷி மற்றும் விஹான் மல்ஹோத்ரா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யவன்ஷி 52 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் 13 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 143 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய விஹான் மல்ஹோத்ராவும் சதமடித்த நிலையில் 15 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 129 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். 

இதனால் இந்திய யு19 அணி இன்னிங்ஸ் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 363 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேக் ஹோம் 4 விக்கெட்டுகளையும், செபாஸ்டியன் மோர்கன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பென் டௌகின்ஸ் மற்றும் ஜோசப் மூர்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 52 ரன்னிலும் ஜோசப் மூர்ஸும், 67 ரன்களில் பென் டௌகின்ஸும் விக்கெட்டை இழந்தார். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் களமிறங்கிய ரிக்கி ஃபிளிண்டாஃப் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன் தனது சதத்தையும் பதிவுசெய்தார். பின் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 107 ரன்களைச் சேர்த்த நிலையில் ஃபிளிண்டாஃப் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து யு19 அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 308 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் நமன் புஷ்பக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய யு19 அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News