EN-W vs WI-W Match 20 ICC Women's T20 World Cup 2024: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement

இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து, அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில்  இரண்டு வெற்றி, ஒரு தோல்வியை பதிவுசெய்து அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிசெய்யும். இதனால் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  

Advertisement

EN-W vs WI-W Match 20: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர்
  • இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
  • நேரம் - அக்.14 இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

EN-W vs WI-W Match 20: Ground Pitch Report

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 106 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 48 முறையும், சேஸிங் செய்த அணி 56 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 140 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 212 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

EN-W vs WI-W Match 20: Head-to-Head 

  • மோதிய போட்டிகள் - 29
  • இங்கிலாந்து மகளிர் அணி - 19
  • வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி - 08
  • முடிவில்லை - 02
Advertisement

EN-W vs WI-W Match 20: Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

England Women vs West Indies Women Possible XIs 

இங்கிலாந்து மகளிர் அணி: டேனியல் வியாட்-ஹாட்ஜ், மையா பௌச்சர், ஹீதர் நைட் (கே), சோபியா டன்க்லி, நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், ஆமி ஜோன்ஸ், சாரா க்ளென், டேனியல் கிப்சன், சோஃபி எக்லெஸ்டோன், சார்லோட் டீன், லாரன் பெல்

Advertisement

 வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி: ஸ்டாபானி டெய்லர்,  ஹீலி மேத்யூஸ் (கே), டியான்ட்ரா டோட்டின், ஷெமைன் கேம்பல், கியானா ஜோசப், சினெல்லே ஹென்றி, ஆலியா அலீன், அஷ்மினி முனிசார், மாண்டி மங்ரு, அஃபி பிளெட்சர், கரிஷ்மா ராம்ஹராக்

EN-W vs WI-W Match 20: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: ஷெமைன் கேம்பல்
  • பேட்டர்ஸ்: டேனியல் வையட், மையா பௌச்சர், ஸ்டாபானி டெய்லர்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஹீலி மேத்யூஸ், டியான்ட்ரா டோட்டின், நாட் ஸ்கைவர் பிரண்ட்
  • பந்து வீச்சாளர்கள்: அஃபி ஃபிளெட்சர், கரிஷ்மா ராம்ஹரக், சோஃபி எக்லெஸ்டோன், சார்லேட் டீன்

EN-W vs WI-W Match 20 Dream11 Prediction, Today Match EN-W vs WI-W, EN-W vs WI-W Dream11 Team, England Women vs West Indies Women, Fantasy Cricket Tips, EN-W vs WI-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the ICC Women's T20 World Cup 2024

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News