விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று (ஆகஸ்ட் 25) தொடங்குகிறது. லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா தோல்வி நிலைக்கு சென்று அதில் இருந்து மீண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றியை பெற்றது.

Advertisement

இதனால் 3ஆவது டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும்.பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்திய அணி

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் , ரோகித் சர்மா ஆகியோர் மிகவும் நல்ல ஃபார்மில் உள்ளனர். கடந்த டெஸ்டின் 2ஆவது இன்னிங்சில் ரகானேவும், புஜாராவும் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பியது அணிக்கு சாதகமான நிலையை உருவாக்கியுள்ளது.

மேலும் கடந்த 2 டெஸ்டிலும் இந்தியா 4 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கியது. இதில் பும்ரா 12 விக்கெட்டும் , முகமது சிராஜ் 11 விக்கெட்டும், ‌ஷமி 7 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

Advertisement

இதனால் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் ஏதும் இருக்காது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்குவதால், அஸ்வினுக்கு இப்போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. 

இங்கிலாந்து அணி 

ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.

Advertisement

ஆனால் இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலவீனத்துடன் இருக்கிறது. கேப்டன் ஜோரூட் ஒருவரே பேட்டிங்கில் சிறப்பான நிலையில் இருக்கிறார். அவர் 2 சதம் உட்பட 386 ரன் எடுத்துள்ளார். அவரை நம்பிதான் அணியே இருக்கிறது. பந்துவீச்சில் ஆண்டர்சன், ராபின்சன் தலா 9 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீரர் மார்க்வுட் இந்த டெஸ்டில் ஆடவில்லை. இது இங்கிலாந்துக்கு பாதிப்பாகும். மார்க்வுட் இடத்தில் சகிப்மெக்மூத் இடம் பெறுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பேட்டிங் பலவீனமாக இருப்பதால் டாம் சிப்லிக்கு பதிலாக டேவிட்மலான் இடம் பெற்றுள்ளார். ஜோஸ்பட்லர், பேர்ஸ்டோவ், மொய்ன்அலி ஆகியோர் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

Advertisement

உத்தேச அணி

இங்கிலாந்து - ஹசீப் ஹமீத், ரோரி பர்ன்ஸ், டேவிட் மாலன், ஜோ ரூட்(கே), ஜானி பெயர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் கரன், கிரேக் ஓவர்டன்/சாகிப் மஹ்மூத், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்தியா - ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா/ ஆர் அஷ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News