இங்கிலாந்து அணியானது தற்சமயம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து அந்த அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. 

Advertisement

இத்தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியின் சீனியர் வீரர்களான மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் உள்ளிட்டோர் மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

அதேசமயம் ஜோஷ் ஹல், ஜேக்கப் பெதெல், ஜான் டர்னர், டேன் மௌஸ்லி மற்றும் ஜோர்டன் காக்ஸ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அணியின் அனுபவ வீரரான ஜோ ரூட்டிற்கு பணிச்சுமை காரணமாக இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. மேற்கொண்டு ஹாரி புரூக், கஸ் அட்கின்சன், பென் டக்கெட், ஜேமி ஸ்மித் மற்றும் மேத்யூ பாட்ஸ் உள்ளிட்டோருக்கு டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டு, ஒருநாள் அணியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே, இங்கிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 பிளாஸ்ட் தொடரில் லங்கஷைர் அணிக்காக பட்லர் விளையாடி வந்த நிலையில், காயம் காரணமாக அவர் அத்தொடரில் இருந்து விலகினார். 

தற்சமயம் காயத்தில் இருந்து ஜோஸ் பட்லர் முழுமையாக குணமடையாத காரணத்தால் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ஜோஸ் பட்லர் இத்தொடரில் இருந்து விலகும் பட்சத்தில் இங்கிலாந்து அணியை சாம் கரண் அல்லது பில் சால்ட் ஆகியோர் அணியின் கேப்டனாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்து அணிக்காக 124 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோஸ் பட்லர் 3,264 ரன்களை எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 24 அரைசதங்களையும் அடித்துள்ளார். இது தவிர, இங்கிலாந்து அனிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் ஜோஸ் பட்லர் இதுவரை 181 போட்டிகளில் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 39.54 சராசரியில் 5,022 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 11 சதங்கள் மற்றும் 26 அரை சதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

இங்கிலாந்து டி20 அணி: ஜோஸ் பட்டர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், சாம் கரன், ஜோஷ் ஹல்,வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஆதில் ரஷித், ஃபில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News