சிறந்த டி20 வீரரான டேவிட் மலான், இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 33 வயது மலான், இங்கிலாந்து அணிக்காக 15 டெஸ்டுகள், 6 ஒருநாள், 30 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக 2018ஆம் ஆண்டுல்  விளையாடினார். 

Advertisement

அத்தொடரில் விராட் கோலி தனது முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் எடுத்ததோடு, டெஸ்ட் தொடரில் 593 ரன்கள் எடுத்து அசத்தினார். அதற்கு காரணம் விராட் கோலியின்  அவர் அளித்த இரு கேட்சுகளை ஸ்லிப் பகுதியில் நின்ற டேவிட் மாலன் நழுவவிட்டார் . முதல்முறை கோலி 21 ரன்களிலும் 2ஆவது முறை 51 ரன்களிலும் விளையாடிக்கொண்டிருந்தார். 

Advertisement

இந்நிலையில் இதுகுறித்து பேசிய மாலன், “கோலியின் இரு கேட்சுகளை நழுவவிட்டதை என்னால் மறக்க முடியாது. அதனால் அவர் 150 ரன்கள் வரை எடுத்துவிட்டார். நல்ல நினைவாக அது அமையவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் என்றால் என்ன என்பதை அது உணர்த்துகிறது. 

சிலசமயங்களில் நீங்கள் ரன்கள் எடுக்க மாட்டீர்கள், கேட்சுகளை நழுவவிடுவீர்கள். எல்லாமே தவறாக அமையும். அதன்பிறகு ஸ்லிப் பகுதியில் அவ்வளவாக நான் நிற்பதில்லை. கவுண்டி கிரிக்கெட்டில் வெவ்வேறு பகுதிகளில் ஃபீல்டிங் செய்துவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் திடீரென்று ஸ்லிப் பகுதியில் நிற்பது கடினமாக இருந்தது. 

எனினும் இங்கிலாந்துக்காக விளையாடும்போது எல்லாவிதமான வாய்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும். அடுத்த வாய்ப்பு மீண்டும் வந்தால் சில கேட்சுகளைப் பிடிப்பதில் ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News