இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

ஜஸ்பிரித் பும்ராவின் வேகத்தில் சிக்கி மிகவும் மோசமான இலக்கை மட்டுமே இங்கிலாந்து அணி நிர்ணயித்தது. ஓவல் பிட்ச்-ல் மிகவும் ஸ்விங் இருந்ததால் களமிறங்கிய இந்திய அணியும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறுமோ என்ற பதற்றம் நிலவியது. 

Advertisement

ஆனால் அதனை பொய்யாக்கினர் ரோஹித் - தவான் ஜோடி. நீண்ட நாட்களுக்கு பின் சேர்ந்த அவர்கள் சீரான வேகத்தில் ரன் குவித்தனர். இதன்மூலம் 18.4 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. 

இப்போட்டியில் ரோஹித் சர்மா - ஷிகர் தவான் இணை இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், 114 ரன்களை பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இந்நிலையில் இந்த ரன்கள் மூலம் புதிய சாதனையை அவர்கள் படைத்துள்ளனர். 

சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த பட்டியலில் 4ஆவது ஜோடியாக இணைந்துள்ளனர். இவர்கள் 5000 ரன்களை கடந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளனர்.

 

Advertisement

இந்த பட்டியலில் முதல் இடத்தில் சச்சின், கங்குலி ஜோடி 176 முறை இணைந்து 6,609 ரன்களை அடித்துள்ளனர். அதன்பின்னர் கில் கிறிஸ்ட் - ஹெய்டன் ஜோடி 5,372 ரன்களும், ஹெய்னஸ் - க்ரீனிட்ஜ் ஜோடி 5,150 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் தற்போது ரோஹித் - தவான் ஜோடி இணைந்துள்ளனர்.
 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News