ENG vs IND, 1st Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷர்தூல் தாக்கூருக்கு ஆறு ஓவர்கள் மட்டுமே வாய்ப்பு கொடுத்தது சரியான முடிவு அல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 

Advertisement

லீட்ஸில் நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் இப்போட்டியில் நான்கு நாள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில், போட்டியின் முடிவானது இறுதிநாள் ஆட்டத்தை நோக்கி உள்ளது. இதில் கடைசி நாளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 350 ரன்கள் தேவை, அதே நேரத்தில் இந்திய அணிக்கு 10 விக்கெட்டுகள் தேவை என்ற நிலை உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால் இரு அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் நான்காவது பந்துவீச்சாளராக ஷர்துல் தாக்கூர் உள்ளார். ஆனால் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் வெறும் 6 ஓவர்களை மட்டுமே வீசியதுடன் விக்கெட்டுகள் ஏதுமின்றி 38 ரன்களையும் கொடுத்திருந்தார். ஆனாலும் முதல் இன்னிங்ஸில், இந்திய கேப்டன் ஷுப்மான் கில் ஷர்துல் தாக்கூரை ஆறு ஓவர்கள் மட்டுமே பந்து வீசச் செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் 20 ஓவர்கள் வீச வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், ஷர்தூல் தாக்கூருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இந்நிலையில் ஷர்தூல் தாக்கூரின் பந்துவீச்சை அணி நிர்வாகம் நம்பவில்லை எனில் அவரை ஏன் பிளேயிங் லெவனில் சேர்த்தீர்கள் என்று  இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ஷர்துல் தாக்கூரை பிளேயிங் லெவனில் தேர்வு செய்த முடிவு இந்திய அணி நிர்வாகம் கவனிக்க வேண்டிய ஒன்று. அவரது பந்துவீச்சை அவர்கள் நம்பவில்லை என்றால், ஏன் அவரை விளையாட வைக்கிறார்கள்? இது நிச்சயமாக ஒரு பிரச்சினை. நீங்கள் ஒரு பந்துவீச்சாளரை நம்பப் போவதில்லை என்றால், ஏன் அவரை விளையாட வைத்தீர்கள்?

Also Read: LIVE Cricket Score

நீங்கள் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை விளையாட வைக்கும்போது, ​​ஷர்துலுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கப் போவதில்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். மேலும் அவர் நன்றாக பந்துவீசவில்லை, ஆனால் நீங்கள் இவ்வளவு பந்துவீசியிருக்கும்போது, ​​அவருக்கு ஆறு ஓவர்கள் மட்டுமே வாய்ப்பு கொடுத்தது சரியான முடிவு அல்ல. ஷர்துலைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருக்கிறது, ஆனால் ஷுப்மான் என்ன நினைக்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மற்ற பந்து வீச்சாளர்கள் பந்து வீசும்போது இங்கிலாந்து மீது அதிக அழுத்தத்தை அவரால் உருவாக்க முடிகிறது” என்று கூறியுள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News