England vs India Test Series: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா சேர்க்கப்பட்டுள்ளார். 

Advertisement

இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ரோஹித் சா்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இல்லாத நிலையில், இளம் வீரா் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி தற்போது இங்கிலாந்து சென்றுள்ளது.

Advertisement

மேற்கொண்டு சாய் சுதர்ஷன், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், கருண் நாயர் மற்றும் ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள்து. அதேநேரத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அக்ஸர் படேல், ஹர்ஷித் ரானா, சர்ஃப்ராஸ் கான் உள்ளிட்டோர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சர்ஃப்ராஸ் மற்றும் ஹர்ஷித் ரானா இருவரும் இந்திய ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டனர். 

அவர்கள் இருவரும் இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் அதில் சர்ஃப்ராஸ் கான் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். அதேசமயம் ஹர்ஷித் ரானா பந்துவீச்சில் பெரிதளவில் சோபிக்க தவறியதுடன் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தார். இதுபோன்ற சூழலில் தான் ஹர்ஷித் ரானா இந்திய டெஸ்ட் அணியுடன் பயணிப்பார் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்சமயம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ரானா சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ஒருபக்கம் இந்திய அணியின் பந்துவீச்சை வலிமைப்படுத்தும் என்றாலும், மறுபக்கம் ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃப்ராஸ் கான் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு தராமல் ஹர்ஷித் ரானாவுக்கு வாய்ப்பு வாழங்கியுள்ளதால் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News