India vs England 1st Test Day 1: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி துணைக் கேப்டன் ரிஷப் பந்த் அரை சதமடித்ததன் மூலம் எம் எஸ் தோனி, ரோஹித் சர்மா போன்ற முன்னாள் கேப்டன்களில் சாதனையை முறியடித்துள்ளார்.

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரது சதத்தின் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 359 ரன்களைக் குவித்து வலிமையான நிலையில் உள்ளது.

இந்திய அணி தரப்பில் கேப்டன் ஷுப்மன் கில் 127 ரன்களுடனும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பந்த் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். 

இரண்டாவது இந்திய வீரர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பந்த் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 3ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு 3ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர் எனும் பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார். முன்னதாக எம் எஸ் தோனி 90 போட்டிகளில் 4876 ரன்களைக் குவித்துள்ளார். 

இரண்டாவது விக்கெட் கீப்பார்

சர்வதேச டெஸ்டில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வேகமாக 3000 டெஸ்ட் ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் ரிஷப் பந்த் இரண்டாவது இடத்தை எட்டியுள்ளார், அவர் 76 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளர். இதுதவிர்த்து ஆசிய விக்கெட் கீப்பராக முதலிடத்தையும் பிடித்துள்ளார். அதேசமயம் உலகளவில் ஆஸ்திரேலிய அணியின் ஆடம் கில்கிறிஸ் 63 இன்னிங்ஸ்களில் 3ஆயிரம் ரன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிவேகமாக 3000 டெஸ்ட் ரன்களை எட்டிய விக்கெட் கீப்பர்கள்

  • 63 இன்னிங்ஸ்: ஆடம் கில்கிறிஸ்ட்.
  • 76 இன்னிங்ஸ்: ரிஷப் பந்த்*.
  • 78 இன்னிங்ஸ்: ஆண்டி ஃப்ளவர்.
  • 78 இன்னிங்ஸ்: குமார் சங்கக்காரா.

தோனியின் சாதனை முறியடிப்பு

இதுதவிர்த்து ஒரு ஆசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக, சேனா நாடுகளில் (தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) அதிக டெஸ்ட் ரன்களை எடுத்ததன் அடிப்படையில் ரிஷப் பந்த் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கெப்டன் மகேந்திர சிங் தோனி 1731 டெஸ்ட் ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் ரிஷப் பந்த் 1732 ரன்களை எடுத்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

 SENA-வில் அதிக டெஸ்ட் ரன்கள் (ஆசியர்கள்)

  • 1732 - ரிஷப் பந்த் (இந்தியா)
  • 1731 - எம்எஸ் தோனி (இந்தியா)
  • 1099 - ஃபரூக் இன்ஜினியர் (இந்தியா)
  • 850 - முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்)
  • 831 - தினேஷ் சண்டிமால் (இலங்கை)

ரோஹித்தின் சிக்ஸர் சாதனை முறியடிப்பு

மேற்கொண்டு ரிஷப் பந்த் இப்போட்டியில் 2 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக ரோஹித் சர்மா 69 இன்னிங்ஸ்களில் 56 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் இருந்த நிலையில், தற்சமயம் ரிஷப் பந்த 61 இன்னிங்ஸ்களில் 58 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

WTC-ல் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள்

  • 58* – ரிஷப் பந்த் (61 இன்னிங்ஸ்)
  • 56 – ரோஹித் சர்மா (69 இன்னிங்ஸ்)
  • 40 – யஷஸ்வி ஜெய்ஸ்வால் (37 இன்னிங்ஸ்)
  • 32 – ஷுப்மன் கில் (60 இன்னிங்ஸ்)
  • 29 – ரவீந்திர ஜடேஜா (58 இன்னிங்ஸ்)

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News