அதிவேகமாக 50 சிக்ஸர்கள்: ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிப்பாரா ஜெய்ஸ்வால்?

Yashasvi Jaiswal Fastest 50 Sixes In Test Record: இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அந்தவகையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 போட்டிகளில் 36 இன்னிங்ஸ்களில் விளையாடி 39 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மேலும் 11 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 சிக்ஸர்களை அடித்த வீரர் எனும் சாதனையைப் படைப்பார். தற்போது இந்த சாதனையை பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடியின் பெயரில் உள்ளது.
ஷாஹித் அஃப்ரிடி 46 இன்னிங்ஸ்களில் 50 சிக்ஸர்களை அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இதனால் அஃப்ரிடியின் இந்த சாதனையை முறியடிக்க யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் 9 இன்னிங்ஸ்கள் உள்ள நிலையில் நிச்சயம் அவர் இந்த சாதனையை முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. ஏனெனில் இதற்கு முன்னரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்திருந்தார்.
சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் இரண்டு இரட்டை சதங்கள் உட்பட 712 ரன்கள் எடுத்தார். அந்தத் தொடரில் அவர் மொத்தமாக 26 சிக்ஸர்களை அடித்திருந்தார். மேலும் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீது அதிக பொறுப்பு உள்ளது. இதனால் இந்த முறையும் ரசிகர்கள் அவரிடமிருந்து அற்புதமான ஆட்டத்தை எதிர்பார்க்கின்றனர்.
Also Read: LIVE Cricket Score
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 சிக்ஸர்களை அடித்த வீரர்கள்
- ஷாஹித் அஃப்ரிடி - 46 இன்னிங்ஸ்
- ரோஹித் சர்மா - 51 இன்னிங்ஸ்
- டிம் சௌதீ- 60 இன்னிங்ஸ்
- ஆண்ட்ரூ பிளின்டாஃப் - 71 இன்னிங்ஸ்
- ஆடம் கில்கிறிஸ்ட் - 74 இன்னிங்ஸ்
- மேத்யூ ஹேடன் - 75 இன்னிங்ஸ்