ENG vs IND: டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

Updated: Tue, Jun 28 2022 10:53 IST
England Announces Test Squad Against India, Includes Billings & Anderson (Image Source: Google)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரே டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் கடந்தாண்டு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2 - 1 என முன்னிலை பெற்றது. 

கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒரே ஒரு போட்டி மட்டும் தற்போது நடைபெறுகிறது. அதன்படி இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஆனால் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி தொடரை வெல்வது அவ்வளவு எளிதானது அல்ல. நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வைட் வாஷ் செய்து அசத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சாம் பில்லிங்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், சாம் பில்லிங்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஸாக் கிரௌலி, பென் ஃபோக்ஸ், ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரேக் ஓவர்டன், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், ஆலி போப் .

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை