மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

Updated: Tue, Aug 27 2024 20:03 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா மற்று பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. 

இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஹீதர் நைட் தலைமையிலான அந்த அணியில் 15 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனை டாமி பியூமண்ட், வேகப்பந்து வீச்சாளர்கள் கேட் கிராஸ் மற்றும் லாரன் ஃபில்லர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

அதேசமயம் ஹீத நைட், டேனியல் வையட், சோபியா டங்க்லி, ஆலிஸ் கேப்ஸி, ஏமி ஜோன்ஸ், சோஃபி எக்லெஸ்டோன், மையா பௌச்சர் ம்ற்றும் சார்லீ டீன் உள்ளிட் நட்சத்திர வீராங்கனைகள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக்கொண்டனர். இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் அணியானது தங்களது முதல் லீக் போட்டியில் அக்டோபர் 5ஆம் தேதி வங்கதேச அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து மகளிர் அணி: ஹீதர் நைட் (கே), லாரன் பெல், மையா பௌச்சியர், ஆலிஸ் கேப்ஸி, சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், டேனியல் கிப்சன், சாரா கிளென், பெஸ் ஹீத், ஏமி ஜோன்ஸ், ஃபிரேயா கெம்ப், நாட் ஸ்கைவர்-பிரண்ட், லின்சி ஸ்மித், டேனியல் வையட். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை