ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 4 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அதன்படி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் ஸாக் கிரௌலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். பின்னர் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 231 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 20 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 140 ரன்களை அடித்திருந்த பென் டக்கெட் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஸாக் கிரௌலியுடன் இணைந்த ஒல்லி போப்பும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 

Advertisement

இதில் ஸாக் கிரௌலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தையும், ஒல்லி போப் தனது 8ஆவது சதத்தையும் பூர்த்தி செய்து அசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் 14 பவுண்டரிகளுடன் 124 ரன்களை எடுத்திருந்த ஸாக் கிரௌலி தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட்டும் 34 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஒல்லி போப்புடன் இணைந்த ஹாரி புரூக் நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கினார்.

Also Read: LIVE Cricket Score

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 498 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஒல்லி போப் 24 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 169 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெசிங் முஸரபானி, சிக்கந்தர் ரஸா மற்றும் வெஸ்லி மதவெரா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து வலிமையான நிலையில் இங்கிலாந்து அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News