பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்; தீவிர பயிற்சியில் இங்கிலாந்து அணி - காணொளி!

Updated: Sat, Oct 05 2024 13:05 IST
Image Source: Google

இங்கிலாந்து டெஸ்ட் அணி கடந்த மாதம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

இதனையடுத்து இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் தொடரானது அக்டோபர் 28ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது போட்டி மட்டும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் அணிகள் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில், இப்போட்டிக்காக இங்கிலாந்து அணி வீரர்கள் முல்தான் சென்றடைந்ததுடன், தங்களது பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

முன்னதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகின. மேற்கொண்டு வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல்லும் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸாக் கிரௌலில் மீண்டும் டெஸ்ட் அணியில் இணைந்துள்ளார். 

இது இங்கிலாந்து அணிக்கு சாதகமான ஒன்றாக அமைந்தாலும், அணியின் கேப்டன் ஸ்டோக்ஸின் நிலை குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இஙிலாந்து அணி பயிற்சி மேற்கொள்ளும் காணொளியானது வெளியாகியுள்ளது. அதில் பென் ஸ்டோக்ஸ் வலை பயிற்சியில் பேட்டிங்க் செய்வதுடன், பயிர்சியாளர் பிராண்ட மெக்கல்லமுடன் இணைந்து வீரர்களிடையே உரையாடியதும் பதிவாகியுள்ளது. 

இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பார் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. மேற்கொண்டு இப்போட்டிக்காக இங்கிலாந்து அணியின் அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளியானது இணையாத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கே), ரெஹான் அஹ்மத், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி ப்ரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டன் காக்ஸ், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜோஷ் ஹல், ஜேக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

Also Read: Funding To Save Test Cricket

முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கேப்டன்), சௌத் ஷகீல், அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், மிர் ஹம்சா, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, நோமன் அலி, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃப்ராஸ் அகமது, ஷஹீன் ஷா அஃப்ரிடி. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை