இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement

இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இதுவரை நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும்ம் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நவம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான வெஸ் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணியில் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் போது விதிகளை மீறியதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில், வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது காயம் காரணமாக பெவிலியன் திரும்பிய ரீஸ் டாப்லி, அப்போது டாக்வுட்டில் இருந்த சேர்களை ஆக்ரோஷமாக தூக்கி எறிந்துள்ளார். இது ஐசிசி நடத்தை விதிகளின் படி தவறு என்ப்தால், போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது தவறை ஒப்புக்கொண்டதன் காரணமாக, மேற்கொண்டு விசாரணைக்கு அவர் வர தேவையில்ல என ஐசிசி அறிவித்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News