இலங்கை தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள் & டி20 அணி அறிவிப்பு!

Updated: Mon, Jan 01 2024 18:20 IST
இலங்கை தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள் & டி20 அணி அறிவிப்பு! (Image Source: Google)

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் ஜனவரி 6ஆம் தேதி முதலும், டி20 தொடர் ஜனவரி 14ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஒருநாள் அணிக்கு குசால் மெண்டிஸ் கேப்டனாகவும், சரித் அசலங்கா துணைக்கேப்டனாவுக் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயம் காரணமாக ஆசிய கோப்பை, உலகக்கோப்பை தொடர்களில் விளையாடமல் இருந்த நட்சத்திர ஆல் ரவுண்டர் வநிந்து ஹசரங்கா மீண்டும் இலங்கை அணிக்கு திரும்பியதுடன், டி20 அணிக்கான கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இன்று இத்தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிகப்பட்டுள்ளன. இதில் ஒருநாள் அணிக்கு கிரேய்க் எர்வின் கேப்டனாகவும், டி20 அணிக்கு சிக்கந்தர் ரிஸாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் காயம் காரணமாக சீன் வில்லியம்ஸ் இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை. 

ஜிம்பாப்வே ஒருநாள் அணி: கிரெய்க் எர்வின் (கேப்டன்), ஃபராஸ் அக்ரன், ரியான் பர்ல், ஜாய்லார்ட் கும்பி, லூக் ஜாங்வே, டகுட்ஸ்வானாஷே கைடானோ, டினாஷே கமுன்ஹுகாம்வே, கிளைவ் மடாண்டே, வெலிங்டன் மசகட்சா, தபிவா முஃபுட்சா, டோனி முனியோங்கா, ஆசிர்வாதம் முசரபானி, ரிச்சர்ட் ங்காரவா, சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா.

ஜிம்பாப்வே டி20 அணி: சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரேக் எர்வின், ஜாய்லார்ட் கும்பி, லூக் ஜாங்வே, டினாஷே கமுன்ஹுகம்வே, கிளைவ் மடாண்டே, வெலிங்டன் மசகட்சா, கார்ல் மும்பா, டோனி முனியோங்கா, பிளஸ்ஸிங் முசரபானி, ஐன்ஸ்லி நட்லோவ், ரிச்சர்ட் ங்காரவா, மில்டன் ஷும்பா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை