ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐந்தாவது லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இப்போட்டி பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களாக கேப்டன் டு ப்ளசிஸ் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி களமிறங்கினர்.

Advertisement

எந்தவித சிக்கலும் இன்றி முதல் ஓவரில் இருந்து பவுண்டர்களாக அடிக்கத் தொடங்கியது விராட்-டு ப்ளசிஸ் ஜோடி. ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் வந்து கொண்டே இருந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அப்போது டு ப்ளசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலி தனது 50ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

Advertisement

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்காக அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல்-இல் திக சதங்கள் அடித்த இரண்டாவது வீரர் ஆவார். 60 அரைசதங்களுடன் டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 அரைசதங்களை அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார். இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஷிகர் தவான், ஐபிஎல்-இல் இதுவரை 49 அரைசதங்களை அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக 50+ ரன்கள் அடித்த இந்திய வீரர்கள்

  •     விராட் கோலி – 50 அரைசதங்கள்
  •     ஷிகர் தவான் – 49 அரைசதங்கள்
  •     ரோகித் சர்மா – 41 அரைசதங்கள்
  •     சுரேஷ் ரெய்னா – 40 அரைசதங்கள்
  •     கவுதம் கம்பீர் – 36 அரைசதங்கள்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டு பிளசிஸ் 43 பந்துகளில் 73 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று 16.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார் விராட் கோலி. இவர் 49 பந்துகளில் 82 ரன்கள் அடித்திருந்தார். ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 4ஆவது ஆர்சிபி அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News