ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் அத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த கோப்பையை வென்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

Advertisement

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. அதன்படி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், கேமரூன் க்ரீன், டிம் டேவிட், ஆடம் ஸாம்பா போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

Advertisement

இவர்களைத் தவிர்த்து ஜோஷ் இங்கிலிஸ், ஆஷ்டன் அகர், நாதன் எல்லிஸ் ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. இருப்பினும் நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி வரும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இடம்பிடிக்காதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்திருந்தது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பயணிக்கு ஆஸ்திரேலிய அணியின் ரிஸர்வ் வீரர்களாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேசமயம் கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட வீரர்கள் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் விளையாடவுள்ள காரணத்தால் அவர்கள் அமெரிக்கா செல்வது தாமதமாகியுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மே 30ஆம் தேதி பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளதால், அதில் ரிஸர்வ் வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா

ரிஸர்வ் வீரர்கள் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட்

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News