நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளின் சிறப்பான செயல்பாடு, ஒட்டுமொத்த உலகக் கோப்பையையும் சுவாரசியமாக மாற்றி இருக்கிறது என்பது உண்மை. இந்த உலகக் கோப்பை தொடரை ஒருதலைப் பட்சமாக செல்ல விடாமல் தடுத்ததில், ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு பெரிய பங்கு இருக்கிறது. அவர்களால் உலகக் கோப்பையின் புள்ளி பட்டியலில் பெரிய மாற்றங்கள் உண்டானது.

Advertisement

நடப்பு உலக கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணி டெல்லியில் வைத்து இங்கிலாந்து அணியை வீழ்த்திய மறுநாள், தென் ஆப்பிரிக்க அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியது. இங்கிருந்துதான் உலகக் கோப்பைத் தொடர் சூடு பிடித்தது என்று கூறலாம். ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது அரையிறுதி வாய்ப்பில் நீடித்தாலும் நெதர்லாந்து அணி அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறிவிட்டது. 

Advertisement

ஆனாலும் கூட அவர்கள் தங்களுடைய கடைசி ஆட்டத்தில் இந்தியாவை பெங்களூரில் வென்றால், அவர்கள் 2025 ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நெதர்லாந்து வீரர் தேஜா நிடமானூருவிடம் இந்திய அணியை வெல்ல முடியுமா? என்பது குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து பேசிய அவர், “கிரிக்கெட் என்பது விளையாட்டுதான். எனவே நாங்கள் இந்தியாவை வீழ்த்துவதும் நடக்கலாம். நாங்கள் எங்கள் வழியில் எங்கள் பிராண்ட் கிரிக்கெட்டை விளையாடுகிறோம். நாங்கள் பந்துவீச்சில் சில பலத்தைப் பெற்று இருக்கிறோம். மேலும் எங்களிடம் ஸ்பின் நன்றாக விளையாடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். விக்கெட்டை வீழ்த்தக்கூடிய வீரர்களும் இருக்கிறார்கள். 

எங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. ஆனால் விளையாட்டில் நிறைய வேடிக்கையான விஷயங்கள் நடந்திருக்கின்றன. எனவே எங்களால் இந்தியாவை வீழ்த்த முடியும். சிறந்த அணியாக விளங்கி வரும் இந்திய அணியை எதிர்த்து விளையாட இருக்கிறோம் என்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு முறை மைதானத்திற்குள் இறங்கும் பொழுதும் எங்கள் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்கிறோம். 

மேலும் எங்களால் முடிந்ததை செய்யவும் முயற்சி செய்கிறோம்.நாங்கள் இந்த உலகக் கோப்பையில் இருப்பது சிறப்பாக செயல்பட்ட பயணத்தின் அடிப்படையில்தான். நாங்கள் எந்த ஒரு விளையாட்டையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு எதிராக மோத நாங்கள் ஆவலாக காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News