விராட், ரோஹித் வேண்டாம்; இவருக்கு கேப்டன்சி கொடுங்க - ஹர்பஜன் சிங்!

Updated: Sat, Dec 09 2023 11:29 IST
விராட், ரோஹித் வேண்டாம்; இவருக்கு கேப்டன்சி கொடுங்க - ஹர்பஜன் சிங்! (Image Source: Google)

சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான பயணத்தை தொடங்கியுள்ளது. ஆனால் அந்த பயணத்தில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய நட்சத்திர சீனியர் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடுவார்களா சந்தேகமும் குழப்பமும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய அவர்கள் அடுத்ததாக நடைபெறும் தென்னாபிரிக்க தொடர் உட்பட கடந்த ஒரு வருடமாக மேற்கொண்டு ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. மேலும் 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு ரோகித் சர்மா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர்களின் சுமாரான செயல்பாடுகள் முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் அவர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய வீரர்களை கொண்ட இளம் அணியை களமிறக்கும் வேலையை பிசிசிஐ ஏற்கனவே கையிலெடுத்துள்ளது. இந்நிலையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினால் அதைப்பற்றி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிடம் நேரடியாக தெளிவாக சொல்லி விட வேண்டும் என்று பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவுக்கு ஹர்பஜன் சிங் கோரிக்கை வைத்துள்ளார்

இதுகுறித்து பேசிய அவர்,"கடந்த சில போட்டிகளில் சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி சிறப்பாக ஆடியது. இப்போது நம் எதிர்காலம் பற்றி யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன். விராட் கோலி, ரோஹித் சர்மா இரண்டும் பெரிய பெயர்கள். அவர்களுடன் நிச்சயம் இது குறித்து ஆலோசிக்க வேண்டும். நாம் இப்போதே இளம் வீரர்களை ஆதரித்தால் அவர்கள் உலகக்கோப்பை வருவதற்குள் தயாராகி விடுவார்கள். அதே சமயம், விராட் கோலி, ரோஹித் சர்மா தங்கள் டி20 எதிர்காலம் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி அவர்களிடம் பிசிசிஐ பேச வேண்டும்" என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை