இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20  போட்டிகளில் விளையாடி வருகின்றன. இரு அணிகளும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகின்றன. அதன்பின் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. 

Advertisement

இதையடுத்து இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட அயர்லாந்து செல்லவுள்ளது. இந்த நிலையில், ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை காரணமாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு  எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த பிறகு அவர் எவ்வாறு உணர்கிறார் என்பதைப் பொறுத்தே அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறுவாரா எனத் தெரியும். 

உலகக் கோப்பை மிக முக்கியமாக உள்ளதால் ஹார்திக் பாண்டியாவின் பணிச்சுமையை குறைக்க வாய்ப்புள்ளது. உலகக் கோப்பை தொடரில் ஹார்திக் பாண்டியா துணைக் கேப்டன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஆகஸ்ட் 18,20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News