ENG vs IND: முதல் டி20-க்கான இந்திய அணியை வழிநடத்தும் ஹர்திக் பாண்டியா? 

Updated: Thu, Jun 30 2022 11:44 IST
Hardik Pandya led squad to play 1st T20 vs England, Kohli, Pant, Bumrah ‘other regulars to return fr (Image Source: Google)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதில் நாளை டெஸ்ட் போட்டி நடைபெறும் நிலையில் வரும் 7 ஆம் தேதி முதல் டி20 போட்டி சௌதாம்டன் நகரில் நடைபெறுகிறது.

டெஸ்ட் போட்டிக்கும், டி20 போட்டிக்கும் ஒருநாள் மட்டும் தான் இடைவெளி இருக்கிறது. இதனால் இந்திய அணி இதற்கு மட்டும் தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டி20 போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ,பும்ரா ஆகியோர் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து அயர்லாந்து தொடரில் பங்கேற்ற இந்திய அணியே இங்கிலாந்து தொடரிலும் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் இரண்டாவது டி20 முதல் நட்சத்திர வீரர்கள் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று டி20 போட்டிக்கான பயிற்சி ஆட்டமும் ஜூலை ஒன்றாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதிலும் அயர்லாந்து தொடரில் பங்கேற்ற அது இந்திய அணி இந்த தொடரில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தொடரில் ஆர்ஷ்தீப் சிங், ராகுல் திருப்பதி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவலில் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களின் திறனை ஆய்வு செய்ய பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை