கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோது, சேத்தன் ஷர்மா தான் தேர்வுக்குழு தலைவராக செயல்பட்டு வந்தார். அப்போது விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க கங்குலி, சேத்தன் ஷர்மாவுக்குத்தான் பெரும் பங்கு இருந்ததாக கருதப்பட்டது. பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், எங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என திட்டவட்டமாக இருவரும் தெரிவித்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, அணித் தேர்வில் இருந்த அதிருப்தி காரணமாக சேத்தன் ஷர்மாவின் பதவி பறிக்கப்பட்டது. கங்குலியும் பசிசிஐ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது ரோஜர் பின்னி தான் பிசிசிஐ தலைவராக இருக்கிறார். இந்நிலையில், மீண்டும் சேத்தன் ஷர்மாவுக்கு தேர்வுக்குழு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், சேத்தன் ஷர்மா தங்கியிருந்த இடத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று ரகசிய கேமரா வைத்து கண்காணித்தது. அப்போது, ஒரு நபரிடம் சேத்தன் ஷர்மா பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியது பதிவாகியுள்ளது.

இதில், ஹார்திக் பாண்டியா கேப்டன்ஸியை பெற்ற விவகாரம் குறித்தும் சேத்தன் ஷர்மா பேசியுள்ளார். “ஹார்திக் பாண்டியா எனது வீட்டுக்கு அடிக்கடி வருவார். பலமணி நேரம் அமர்ந்து பேசுவார். சிலமுறை எங்கள் வீட்டு சோபாவிலேயே அவர் சாய்ந்து தூங்கிவிடுவார். அந்த அளவுக்கு அவர் என்னுடம் நெருங்கி பழகினார்” எனக் கூறியுள்ளார்.

இதன்மூலம், குறுக்கு வழியில் கேப்டன் பதவியை பெறத்தான் ஹார்திக் பாண்டியா அப்படி சேத்தன் ஷர்மா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார் என பலர் யூகங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். சேத்தன் ஷர்மா இப்படி பகீர் நெருப்பை பற்ற வைத்திருப்பதால், ஹார்திக் பாண்டியாவின் கேப்டன்ஸிக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News