அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இதனையடுத்து உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வீரர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். 

Advertisement

அதன்பின் பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த பேரணி மற்றும் பாராட்டு விழாவில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்றனர். மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.125 கோடி பரிசுத்தொகைக்கான காணொளியையும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வழங்கி கௌரவித்தார்.

Advertisement

இதனையடுத்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிய வீரர்களுக்கும் உற்சாக வரவேற்புகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது டி20 உலகக் கோப்பை தொடர் வெற்றிக்கு பின் முதல்முறையாக சொந்த ஊரான வதோதராவுக்கு வருகை தந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்படி திறந்தவெளி பேருந்தில் வலம் வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடி வரவேற்பளித்தனர். 

மேற்கொண்டு எதிர்வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஹார்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2023 உலகக் கோப்பையின்போது காயம் காரணமாக வெளியேறியபோது எடுத்த புகைப்படத்தினையும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினையும் இணைந்து பகிர்ந்துள்ளார்.

 

மேலும் அந்த பதிவில், “ 2023 உலகக் கோப்பை காயத்திலிருந்து மீள்வது எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் நான் எடுத்த முயற்சியின் காரணமாக தான் என்னால் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு உதவ முடிந்தது. கடின உழைப்பு எப்போதும் கவனம் பெறாமல் போகாது. நாம் அனைவரும் எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம் மற்றும் நமது உடற்தகுதிக்கு உழைப்போம்” என பதிவுசெய்துள்ளார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News