INDW vs ENGW: டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Updated: Sat, Dec 02 2023 09:45 IST
INDW vs ENGW: டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! (Image Source: Google)

இங்கிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் வரும் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையும், டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ரேனுகா சிங் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய டி20 அணி: ஹர்மன்ப்ரீத் கௌர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கௌர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்கூர், டைட்டாஸ் சாது, பூஜா வஸ்த்ரகர், கனிகா அஹுஜா, மின்னு மணி.

இந்திய டெஸ்ட் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஸ்னே ராணா, சுபா சதீஷ், ஹர்லீன் தியோல், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்கூர், டைட்டாஸ் சாது, மேக்னா சிங், ராஜேஸ்வரி கயக்வாட், பூஜா வஸ்த்ரகர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை