ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசியதுடன் சாதனைகளை குவித்த ஹாரி புரூக்!

Updated: Wed, Sep 25 2024 09:30 IST
Image Source: Google

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலமாக சரிலிருந்து மீண்டெழுந்தது.

இதில் அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்தனர்.  அதன்பின் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 30 ரன்களையும், ஆரோன் ஹார்டி 44 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அலெக்ஸ் கேரி 77 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் டக் அவுட்டானார். பென் டக்கெட் 8 ரன்னில் வெளியேறினார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த் வில் ஜாக்ஸ், கேப்டன் ஹாரி புரூக் இணை அதிரடியாக விளையாடியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு156 ரன்கள் பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்தனர். இதில் வில் ஜாக்ஸ் 84 ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில், சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காம இருந்த ஹாரி புரூக் 110 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் 33 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர்.  வெளியேறினார். கேப்டன் ஹாரி புருக் சிறப்பாக ஆடி சதம் கடந்தார்.

பின்னர் இங்கிலாந்து அணி 37.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணியானது 46 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 1-2 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஹாரி புரூக் இங்கிலாந்து அணிக்காக புதிய சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி இப்போட்டியில் சதமடிததன் மூலம் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டியில் சதமடித்த இளம் கேப்டன் எனும் சாதனையை ஹாரி புரூக் பெற்றுள்ளார். முன்னதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் 26 வயது 190 நாள்களில் சதமடித்ததே இதுநாள் வரை சாதையாக இருந்தது.  

அதனைத் தற்போது ஹாரி புரூக் 25 வயதில் சதமடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். இதுதவிர 53 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த நான்காவது இங்கிலாந்து கேப்டன் என்ற பெருமையை ஹாரி புரூக் பெற்றுள்ளார். அவருக்கு முன், இயான் மோர்கன், மைக்கேல் அதர்டன் மற்றும் டேவிட் கோவர் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன்கள்

  • 121 - ஈயான் மோர்கன், சிட்னி, 2015
  • 113* - மைக்கேல் அதர்டன், தி ஓவல், 1997
  • 110* - ஹாரி புரூக், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட், 2024
  • 102 - டேவிட் கோவர், லார்ட்ஸ், 1985
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை