ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 67 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் சதமடித்து அசத்தியதுடன் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 118 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 54 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜித்தேஷ் சர்மா 85 ரன்களையும், மயங்க் அகர்வால் 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

போட்டி முடிவுக்கு பின் வெற்றிகுறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் சர்மா, “என் எண்ணங்களை வெளிப்படுத்த முடியவில்லை, நிகழ்காலத்தில் இருப்பதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். விராட் கோலி ஆட்டமிழந்த போது, ​​ஆட்டத்தை ஆழமாக எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும் என்று நினைத்தேன், என்னுடைய வழிகாட்டி தினேஷ் கார்த்திக் என்னிடம் சொல்வது இதுதான்: எனக்கு இருக்கும் திறமையால் எந்த சூழ்நிலையிலிருந்தும் ஆட்டத்தை முடிக்க முடியும்.

இது ஒரு மிகப் பெரிய அணி, நான் அழுத்தத்தை அனுபவிக்கிறேன். மேலும் விராட் கோலி, குர்னால் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற வீரர்களை பார்க்கும்போது, ​​இந்த வீரர்களுடன் விளையாடுவது எனக்கு உற்சாகமாக இருக்கிறது. இந்த தருணத்தை நாங்கள் ரசிக்கிறோம். இந்த ஆட்டத்தில் எங்களுக்கு என்ன உத்வேகம் கிடைத்தாலும், அதை அடுத்த ஆட்டத்திற்கு முன்னோக்கி எடுத்துச் செல்வோம்.

Also Read: LIVE Cricket Score

Advertisement

மேலும் அணியின் தற்காலிக கேப்டன் பொறுப்பை எனக்கு வழங்கியதற்காக ரஜத்தைத்தான் பாராட்டுகிறேன். ஹேசில்வுட் ஃபிட்டாக இருக்கிறார், எங்கள் அணியில் நம்பிக்கை அமைப்பு மிகவும் வலுவாக உள்ளது, நீங்கள் எந்த வீரர்களைப் பார்த்தாலும், அனைவரும் மேட்ச் வின்னர்கள். நாங்கள் 3-4 விக்கெட்டுகளை இழந்தாலும், இப்போட்டியில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு எப்போதும் இருந்தது” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News