ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். நடப்பு உலகக் கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் இரட்டைச் சதம் விளாசி அசத்தினார். அதேபோல, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் 3ஆவது டி20 போட்டியில் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

Advertisement

இந்நிலையில் தொடர்ச்சியாக விளையாடி வருவதன் காரணமாக அவர் கடைசி இரண்டு டி20 போட்டிகளிலிருந்து விடுப்பு எடுத்து தாயகம் திரும்பியுள்ளார்.  இந்த நிலையில, டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் நம்பிக்கை இருப்பதாக  கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் எண்ணத்தைக் கைவிடவில்லை. நான் ஆஸ்திரேலிய அணிக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில்  (ஒருநாள் மற்றும் டி20) போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறேன். டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய மேக்ஸ்வெல் இதுவரை வெறும் 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு கிளென் மேக்ஸ்வெல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது  குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News