எதிர்வரும் ஜனவரி மாற்று பிப்ரவரி வாக்கில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளன. 

Advertisement

ஜனவரி 3 முதல் ஜனவரி 15 வரையில் இலங்கை அணியும். அதன் பின்னர் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1 வரை நியூஸிலாந்து கிரிக்கெட் அணியும், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகின்றன.

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவார் என வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இலங்கை மற்றும் நியூஸிலாந்து என ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் நிச்சயம் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடிப்பார் என நம்புகிறேன். அது அவருக்கு நிலையானதாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

தற்போது 28 வயதான சஞ்சு சாம்சன், கடந்த 2015 வாக்கில் இந்திய அணியில் அறிமுகமானார். இதுநாள் வரையில் அவர் மொத்தம் 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 330 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 296 ரன்களும் எடுத்துள்ளார் கேரளாவை சேர்ந்த சஞ்சு. ஆனாலும் அணியில் இவருக்கான வாய்ப்பு அணியில் தொடர்ந்து கிடைப்பதில்லை. இந்த சூழலில் அவருக்கு ஆதரவாக ஜாபர் பேசியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News