தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

அதன்படி, நேற்று நடைபெற்ற் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தாலும், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே இணை அதிரடியாக விளையாடியதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. இதில் டேவிட் மில்லர் 82 ரன்களையும், ஜார்ஜ் லிண்டே 48 ரன்களையும் சேர்க்க, பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

இதனையடுத்து சவாலான இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் முகமது ரிஸ்வான் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை போராடி 71 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக பேட்டிங்கில் 48 ரன்களையும் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியா ஜார்ஜ் லிண்டே ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலைலையில், இப்போட்டிக்கு முன்னதாக அணி பேருந்தை தவற விட்டதாகவும், அதன்பின் காவல்துறையின் உதவியுடன் மைதானம் வந்தடைந்ததாக தென் ஆப்பிரிக்க வீரர் ஜார்ஜ் லிண்டே சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜார்ஜ் லிண்டே, “சில காரணங்களால், எனது தொலைபேசி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக காட்டியது. அதனால் நான் எனக்குள், 'சரி, நாம் 4 மணிக்கு நான் கீழே சென்று பேருந்தில் சீக்கிரமாக ஏறிவிடலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன்.  பின்னர் நான் ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் பேருந்து கிளம்புவதைப் பார்த்தேன், அப்போது அந்த உணர்வு எனக்குச் சரியானதாக இல்லை. நல்லவேளையாக காவல்துறையின் உதவின் மூலம் நான் பேருந்தில் ஏறினேன்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

உண்மையில் நான் பேருந்தில் இல்லை என்பதை யாரும் உணரவில்லை, உண்மையில் இந்த அனுபவம் மிகவும் அருமையாக இருந்தது. இது கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும், அடுத்த ஆட்டத்திற்கும் நான் மீண்டும் தாமதமாக வரலாம் என்று எண்ணுகிறேன். ஏனெனில் இப்போட்டியில் நான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை தவறவிட்டதை தவிர்த்து மற்ற அனைத்தும் எனது சிறப்பான கம்பேக்கிற்கு உதவியாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News